இந்தியா மற்றும் பூடான் இடையே ரயில் பாதை அமைக்க முடிவு..! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் அண்டை நாடான பூடானின் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லி விமான நிலையத்தில் பூடான் மன்னரை வரவேற்ற பிறகு அவருடன் கலந்துரையாடினார். 

இதையடுத்து பூடான் மன்னர் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பூடானின் எதிர்காலம் மற்றும் இந்தியாவுடனான தனித்துவமான கூட்டாண்மையை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் டோக்லாம் எல்லை தொடர்பான பிரச்சனைகளை சுமூகமாக தீர்க்கவும், பூடான்-இந்தியா நகரங்களுக்கு இடையே ரயில் போக்குவரத்தை தொடங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த பிரதமருடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதைத் தொடர்ந்து இன்று மாலை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பூடான் மன்னர் சந்திக்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New rail line between India and Bhutan cities


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->