ஒமிக்ரான் பரவல்.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


புதிய உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் இந்தியா உள்ளிட்ட 59 நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவில் டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், சண்டிகர், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, நம் நாட்டில் உருமாறிய ஒமிக்ரான் வகை தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. 

உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா வைரசால் நம் நாட்டின் மூன்றாவது அலை உருவாகிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.  ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளனர். 

இந்நிலையில், இந்தியாவில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது, ஒமிக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் RT-PCR பரிசோதனைக்கு முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new restriction for foreign travelers


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->