தமிழகத்தில் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பத்தில் புதிய சிக்கல்.. தேர்தல் ஆணையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!!
new security features voter id applies only through EC website
இந்தியாவில் 18 வயது நிரம்பியவர்களுக்கு அரசால் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வந்த நிலையில் 17 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் மூலம் 18 வயது நிரம்பியவுடன் வாக்காளர் அடையாள அட்டை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தபால் மூலம் நேரடியாக அனுப்பும் முறை தற்பொழுது நடைமுறையில் உள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. இதன் மூலம் இந்திய குடிமக்கள் அனைத்து தேர்தலிலும் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். தற்போது இந்தியாவில் ஆன்லைன் மூலம் எளிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருந்தது. மேலும் எதிர்பாராத விதமாக வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து போனாலோ அல்லது கிழிந்து விட்டாலோ ஆன்லைன் மூலம் டூப்ளிகேட் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் தமிழகத்தில் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை இ-சேவை மையங்கள் மூலம் பெறும் வசதி நிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை பெற தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பித்து தபால் மூலம் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வாக்காளர் அடையாள அட்டையில் ஹோலோகிராம், கோஸ்ட் இமேஜ், க்யூ ஆர் கோடு போன்ற நவீன வசதிகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
new security features voter id applies only through EC website