யம்மா யம்மா!!!ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் UPI புதிய விதிமுறைகள்...!!!
New UPI rules coming into effect from April 1st
தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் (NPCI) UPI மூலம் பணம் செலுத்தும் நடைமுறைகளில் புதிய விதிமுறைகளை கொண்டுவருகிறது. இந்த விதிமுறைகள் ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வரவுள்ளது. புதிய விதிமுறைகள் பயனர் அனுபவத்தை மேம்படுத்தி, UPI பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.இந்தப் புதிய விதிமுறைகளுக்கு அனைத்து UPI உறுப்பினர் வங்கிகள், 3 ம் தரப்பு செயலிகள், UPI சேவை வழங்குநர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

புதிய விதிமுறைகளின் படி நீண்ட காலம் செயலிழக்கப்பட்ட நிலையிலுள்ள கைப்பேசி எண்களுடன் இணைக்கப்பட்டுள்ள UPI முகவரிக்கள் செயலிழக்கம் செய்யப்பட்டு விடும்.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்களை வங்கிகள் செயலற்றதாக கருதும் போது, பயனர்கள் தங்களது விவரங்களை புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்ய மறுக்கும் பட்சத்தில் UPI சேவையை பயன்படுத்த முடியாத நிலை உருவாகும்.
UPI சேவைகளை பயன்படுத்தும் பயனர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். UPI முகவரியுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் நீண்ட காலம் செயலிழந்து இருக்கும் சூழலில், அந்த முகவரி தானாக நீக்கப்பட்டு விடும். இதனால் பயனர்கள் UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது.UPI சேவைகள் முடக்கப்படாமல் இருக்க சரியான கைப்பேசி எண் புதுப்பிப்பு செய்யப்படுவது அவசியம் ஆகும்.
இந்தத் திட்டம் தொலைத்தொடர்பு துறை ஏற்கனவே பின்பற்றி வரும் திட்டத்தை தழுவியுள்ளது. தற்போதைய நடைமுறைப்படி நீண்ட காலம் செயலிழந்துள்ள கைப்பேசி எண்கள் 90 நாட்களுக்கு பிறகு புதிய பயனர்களுக்கு வழங்கப்பட்டு விடும்.புதிய விதிமுறைகளின் படி பயனரின் வங்கியால் உறுதிப்படுத்தப்பட்ட கைப்பேசி எண் அவரது எண் சார்ந்த UPI முகவரியாக இருக்கும்.
கூடுதலாக வங்கிகள் மற்றும் UPI சேவை வழங்குநர்கள் தங்களது கைப்பேசி எண் பதிவுகளை வாராந்திர அடிப்படையில் புதுப்பிப்பு செய்ய வேண்டும்.பயனர் நலன்களை மேலும் பாதுகாக்க, எண் UPI முகவரிகளை ஒதுக்குவதற்கு முன் பயன்பாடுகளுக்கு வெளிப்படையான ஒப்புதல் தேவைப்படும்.
இதனை தானாக செயல்படுத்தும் அமைத்தல் செயலற்று இருக்கும் என்பதால், பயனர்கள் தாங்களாகவே தேர்வு செய்ய வேண்டும்.தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் உறுதிப்படுத்தும் முறைகள் தாமதமாகும் பட்சத்தில், UPI செயலிகள் தற்காலிக நடைமுறைகளை பின்பற்றி UPI முகவரி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். எனினும், இதுபோன்ற சம்வங்களை உடனடியாக ஆவணப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
English Summary
New UPI rules coming into effect from April 1st