பிரஜ்வல் பதிலளித்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்.!
next stage action after prajwal revanna answer external affairs spokesperson Randhir Jaiswal info
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைதளத்தில் வெளியானதையடுத்து ரேவண்ணாவிடம் இருந்து 2 ஆயிரத்து 900 ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென்டிரைவ் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக ரேவண்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் ஜெர்மனி தப்பித்துச் சென்றார். இதைத் தொடர்ந்து ரேவண்ணாவை கைது செய்ய சி.பி.ஐ. புளூகார்னர் நோட்டீஸ் அனுப்பியது. இதேபோல், பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிறப்பு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை வந்தார். அவரை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விசாரணை குழு போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்வது தொடர்பாக இந்திய பாஸ்போர்ட் சட்டம் 1967 இன் கீழ், வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறது. இது தொடர்பாக கடந்த மே 23ஆம் தேதி அவருக்கு ஷோக்காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவருடைய பதிலுக்காக காத்திருக்கிறோம். அதன் பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்
English Summary
next stage action after prajwal revanna answer external affairs spokesperson Randhir Jaiswal info