#Breaking: நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 100 பேரை கைது செய்தது என்ஐஏ! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்புடைய இடங்களில் என்ஐஏ சோதனை!

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர் அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்புடைய இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பல்வேறு மாவட்டங்களில் இச்சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் சென்னை,கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, கடலூர் ராமநாதபுரம், தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் மற்றும் தொடர்பு தொடர்புடைய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக திண்டுக்கல்லில் நடைபெற்ற என்ஐஏ சோதனை நடைபெற்ற நிலையில் இச்சோதனை அடிப்படையில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களிலும் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது.

நாடு முழுவதும் நடத்தப்படும் இச்சோதனையானது பண பரிவர்த்தனை அடிப்படையில் நடந்து வருவதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பல மாவட்டங்களில் எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NIA check at various places in India related to Popular Front of India


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->