இரண்டாம் கட்ட சோதனையை மேற்கொண்ட என்ஐஏ! நாடு முழுவதும் 8 மாநிலங்களில் இன்று சோதனை!
NIA conducted the second phase of the raid today in 8 states across the country!
அதிகாலை முதல் நடந்து வரும் சோதனை! 170 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்!
நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சிக்கு சொந்தமான இடங்களில் சோதனையை என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறையினர் இணைந்து கடந்த வாரம் சோதனை செய்தனர்.
இந்த சோதனையின் போது 106 பேர் கைதானார்கள். அதில் 11 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும் கேரளா, புது டெல்லி, தெலுங்கானா உட்பட 15 மாநிலங்களில் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் என்ஐஏ மற்றும் அமலாக்க துறையினர் நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனையானது உத்திர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, அசாம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட 8 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இவர்களுடன் மாநில போலீசாரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனையில் லேப்டாப், சிடிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதால் 170 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. மேலும் இன்று நடைபெறும் சோதனைகள் குறித்து தேசிய புலனாய்வு படையினர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட 106 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மேலும் 170 பேர் கைது செய்யப்பட்டுள்ளது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
English Summary
NIA conducted the second phase of the raid today in 8 states across the country!