கான்பூர் ஐஎஸ்ஐஎஸ் வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை.. என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! - Seithipunal
Seithipunal


ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட 8 பேரில் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த 2017 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டம் ஹாஜி காலனி பகுதியில் தேசிய புலனாய்வு அமைப்பினர் மேற்கொண்ட சோதனையின் பொழுது ஐஎஸ்ஐஎஸ் கொடியுடன் பயங்கர ஆயுதங்கள், புகைப்படங்கள், டைரி குறிப்புகள் உள்ளவற்றை பறிமுதல் செய்ததோடு பதுங்கி இருந்த எட்டு பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.

இவர்கள் அனைவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட போபால் பயணிகள் ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நாளில் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்திலும் இவர்களுக்கு தொடர்பு இருந்தது தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் அனைவரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்காக இந்தியாவிலிருந்து செயல்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு தலைவராக ஹதீப் முசாபர் என்பவர் செயல்பட்டதும், ஜாகிர் நாயக் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு ஐஎஸ் அமைப்பின் இணையதளத்தில் உள்ள பல்வேறு காணொளிகளை பதிவிறக்கம் செய்து அனைவருக்கும் பகிர்ந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து பல்வேறு சதி திட்டங்களில் ஈடுபட்டது என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டதை அடுத்து 7 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கி லக்னோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NIA special court orders death sentence to 7 people in Kanpur ISIS case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->