#BREAKING || கேரளாவில் பெரும் சோகம்.. உல்லாச படகு கவிழ்ந்து விபத்து.. 40 பயணிகளில் 9 பேர் பலி..!! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள தனூர்-பரப்பனங்காடி கடற்கரையில் உல்லாச படகில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த உல்லாச படகில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 

இந்தப் படகு விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையின் மற்றும் மீட்பு படையினர் நீரில் மூழ்கிய அனைவரையும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உல்லாச படகில் பயணம் செய்த அனைவரும் நீரில் மூழ்கிய நிலையில் 9 பேரின் உடல்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மேலும் நீரில் மூழ்கிய மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. படகு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nine killed in boat capsizing accident in Kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->