ஒடிசா ரெயில் விபத்தால் 19 ரெயில்கள் ரத்து - இந்தியன் ரெயில்வே அறிவிப்பு.!
nineteen train cancel for odisa train accident
நேற்று ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜாஜ்பூர் பகுதியில் கோரே ரெயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரெயில் ஒன்று, சத்ரபூருக்குச் சென்றுகொண்டிருந்தது. அப்போது, ரெயிலின் ஓட்டுநர், திடீரென பிரேக் அடித்ததால், ரெயிலிலிருந்து எட்டு பெட்டிகள் தடம் புரண்டு, பிளாட்பாரமில் இருந்த பயணிகள் மீது விழுந்ததாக ரெயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதில், இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஏழு பேர் படுகாயமடைந்தனர். மேலும், சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்துக் குறித்து, மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளதாவது, "ரெயில் தடம் புரண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ 2 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் நவீன் பட்நாயக் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சையும் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த விபத்தினால், அந்த பகுதியில் இயக்கப்படும் 19 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 20 ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் இந்தியன் ரெயில்வே தெரிவித்துள்ளது.
English Summary
nineteen train cancel for odisa train accident