பான் கார்டு தான் இனி அடையாள அட்டை.! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது குடியரசுத் தலைவர் உரையுடன் துவங்கியது. இந்த நிலையில், 2023 மற்றும் 2024 ஆம் நிதியாண்டிற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றி இருக்கின்றார்.

அதில், நம் நாட்டில் 76% டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து இருக்கின்றது. அதுபோல மக்களுடைய இணைய பரிவர்த்தனைகள் 4.5 லட்சம் கோடியில் இருந்து 9 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கின்றது. 

5ஜி நெட்வொர்க் சேவையை மேம்படுத்தும் வண்ணம் 100 ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளது. புதிதாக 10,000 உயிரி ஆராய்ச்சி மையங்கள் உருவாக்கப்பட உள்ளன. அதுபோல, தேசிய அளவில் டிஜிட்டல் லைப்ரரிகள் அமைக்கப்பட இருக்கின்றன.

பேன் கார்டு எண் வைத்திருக்கிற வேண்டிய குறிப்பிட்ட அரசு துறை நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், டிஜிட்டல் சேவைகள் அனைத்திற்கும் அடையாள அட்டையாக பான் கார்டு பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nirmala seetharaman Said That Pan as identity card For business holder


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->