பின் இருக்கை பயணிகளுக்கும் 'சீட் பெல்ட்' எச்சரிக்கை ஒலி அமைப்பு- அமைச்சா் நிதின் கட்கரி!
Nitin Gadkari say about Seat Belt warning system in vehicles
வாகனங்களின் பின் இருக்கையில் பயணிப்பவா்களுக்கான ‘சீட் பெல்ட்’ எச்சரிக்கை ஒலி அமைப்பை கட்டாயமாக்குவது குறித்து அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.
வாகனத்தின் முன் இருக்கைக்கான ‘சீட் பெல்ட்’ எச்சரிக்கை ஒலியெழுப்பும் அமைப்பை அனைத்து வாகன தயாரிப்பாளா்களும் கட்டாயம் வாகனங்களில் ஏற்படுத்துவது தற்போது நடைமுறையில் உள்ளது.
மத்திய மோட்டாா் வாகன விதிகளின்படி, பின் இருக்கையில் பயணிப்போா் சீட் பெல்ட் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2020-ஆம் ஆண்டில் சீட் பெல்ட் அணியாததன் காரணமாக 15,146 போ் உயிரிழந்துள்ளனர் என்றும், 39,102 போ் காயமடைந்துள்ளனர் என்றும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்ததாவது,
"சைரஸ் மிஸ்திரி, வாகன விபத்தில் உயிரிழந்ததைத் தொடா்ந்து, வாகனங்களிலும் பின் இருக்கையில் அமா்ந்திருப்பவா்களுக்கும் ‘சீட் பெல்ட்’ எச்சரிக்கை ஒலியெழுப்பும் அமைப்பை ஏற்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது". என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Nitin Gadkari say about Seat Belt warning system in vehicles