இந்தியாவின் முதல் டபுள் டெக்கர் ஏசி பஸ்.. பிரபல சிட்டியில் காலடி.!
Nitin gadkari started New Double Dekker bus In Mumbai
இந்தியாவின் முதல் டபுள் டெக்கர் ஏசி பஸ்சை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி துவங்கி வைத்துள்ளார்.
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக ஸ்விட்ச் மொபிலிட்டி இருக்கிறது. இந்த நிறுவனம்தான் மின்சார பேருந்தை தயாரித்து இருக்கிறது. 231 ஒரு கிலோவாட் திறனை உள்ளடக்கிய பேட்டரி பொருத்தப்பட்டு இருப்பதால் இந்த மின்சார பேருந்தானது 250 கிலோமீட்டர் வரை இயங்கும் தன்மை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்விச் மொபிலிட்டி நிறுவனம் மும்பை சிட்டிக்கு இதுபோல 200 பேருந்துகளை தயாரித்து கொடுக்கும் ஆர்டரை பெற்றுள்ளது. நடப்பு ஆண்டில் முதல் 50 பேருந்துகளை தயாரித்து கொடுக்க உள்ளதாகவும், அடுத்த ஆண்டில் மீதமுள்ள பேருந்துகளை நிறுவனம் டெலிவரி செய்யும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இத்தகைய சூழலில் இந்தியாவின் முதல் டபுள் டெக்கர் எலக்ட்ரிக் பேருந்தை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று தொடங்கி வைத்துள்ளார்.
English Summary
Nitin gadkari started New Double Dekker bus In Mumbai