லாரி ஓட்டுனர்களுக்கு நேர கட்டுப்பாடு... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை ஒட்டி டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது "சாலை விபத்துகளால் மரணங்கள் மற்றும் படுகாயங்கள் ஏற்படுவதை குறைக்கும் வகையில் சில சீர்திருத்தங்களை சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. 

அதற்காக சாலை கட்டமைப்பு, சட்டங்களை அமல்படுத்துதல், சாலை விதிகளை குறித்து விழிப்புணர்வு, சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை போன்றவற்றில் உள்ள நடைமுறை சிக்கல்களை கலையும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோன்று லாரி ஓட்டுநர்களின் பணி நேரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. அதன் மூலம் லாரி ஓட்டுனர்களின் மன உளைச்சலை குறைத்து வேலை செய்யும் நேரம் ஒழுங்குபடுத்தப்படுவதால் சாலை விபத்துகள் குறைய வாய்ப்புள்ளது" என மத்திய சாலைப்போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nitin katkari said regulate the working hours of truck drivers


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->