மத்தியில் காங்கிரஸ் ஆட்சி? இரு பெருந்தலைகளை தட்டி தூக்க பக்கா பிளான்! பீதியில் பாஜக!
Nitish Kumar JTU India Alliance Chandrababu Naidu Telugu Desam
நாடாளுமன்ற மக்களவை பொது தேர்தலில் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி ஆட்சியை அமையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மாலை 4 மணி நிலவரப்படி பாஜக 244 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. தேசிய காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
மொத்தமாக இண்டி கூட்டணி 233 தொகுதிகளிலும், பாஜக 295 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. ஆட்சி அமைப்பதற்கு 273 தேவைப்படும் நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. கூட்டணி கட்சிகளை நம்பியே பாஜக உள்ளது.
குறிப்பாக ஆந்திரா சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவும், பீகார் மாநிலத்தின் நிதிஷ் குமாரின் ஜே.டி.யு ஆதரவும் பாஜகவுக்கு தேவைப்படுகிறது.
காரணம் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. அதே போல் பீகாரில் நித்தேஷ்குமாரின் ஜனதா தல் 14 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. இந்த இரண்டு கட்சிகளின் மொத்த கூட்டுத்தொகை 30 தொகுதிகள் என்று வைத்துக் கொண்டால், பாஜக இந்த இரண்டு கட்சிகளின் ஆதரவை ஆதரவு இருந்தால் மட்டுமே மத்தியில் ஆட்சி அமைக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
இப்படியான சூழ்நிலையில் இண்டி கூட்டணியின் முக்கிய தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு மற்றும் பீகாரின் நிதிஷ்குமாரை தொடர்பு கொண்டு தங்களது கூட்டணிக்கு அழைப்பு கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
துணை பிரதமர், மத்திய அமைச்சர் பதவி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கவதாகவும் காங்கிரஸ் தரப்பிலிருந்து உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
English Summary
Nitish Kumar JTU India Alliance Chandrababu Naidu Telugu Desam