"தற்போது பறவைக்காய்ச்சல் பாதிப்பு இல்லை" - மேற்கு வங்கத்தில் அதிகார்வபூர்வ அறிக்கை !! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்றும், மேலும் மாநிலத்தில் அந்த நோய் தாக்கம் பறவைகளுக்கு உள்ளதா என்ற மதிப்பீட்டை மதிப்பீடு செய்ய மேற்கு வங்க அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள கலியாசாக்கில் இருந்து சுமார் 29,000 பறவைகளின் சோதனையை மாநிலம் ஏற்கனவே நடத்தியுள்ளது. அந்த மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுமிக்கு ஜனவரி மாதம் பறவை காய்ச்சல் நோய் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலத்தின் நிலைமையை மேலும் மற்றொரு சுற்று மதிப்பீடு செய்வதற்காக மாநில சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் (World Health Organisation) பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது.

"மேற்கு வங்கத்தில் இப்போது ஒரு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை. ஜனவரி மாதம் மால்டா மாவட்டத்தில் உள்ள கலியாசாக்கில் நான்கு வயது சிறுமிக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவள் இப்போது நலமாக இருக்கிறாள், நாங்கள் கண்காணித்து வருகிறோம்." என்று இந்த பறவை காய்ச்சல் குறித்து சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

"அதன்பிறகு, மாவட்டத்தின் அந்தப் பகுதியில் இருந்து சுமார் 29,000 பறவைகளை நாங்கள் பரிசோதித்தோம், ஒரு வழக்கு கூட கண்டுபிடிக்கப்படவில்லை," என்று மேலும் அவர் கூறினார்.

அந்த சிறுமி கோழிப்பண்ணை வைத்திருந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், அதுவே அவருக்கு  H9N2 வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்" என்று அந்த அதிகாரி கூறினார்.

"நாங்கள் சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் முழுமையான பரிசோதனை செய்தோம், ஆனால் யாருக்கும் வைரஸ் இருப்பது கண்டறியப்படவில்லை," என்று அவர் கூறினார்.

இந்த H9N2 பறவைக் காய்ச்சல் வைரஸ் என்பது ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸின் துணை வகையாகும், இந்த வகையான தொற்று பறவைகளுடன் நேரடி தொடர்பு அல்லது அசுத்தமான சூழல்களுடன் மறைமுக தொடர்பு மூலம் பரவுகிறது.

"இந்த குழு நாளை மால்டா சென்றடைகிறது. அங்குள்ள நிலவரத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வார்கள். அதை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என அந்த அதிகாரி தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

no bird flu cases the official statement of west Bengal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->