கடையடைப்பு போராட்டத்திற்கு கட்டாயப்படுத்த கூடாது - காவல்துறை அதிரடி உத்தரவு.!
not force come to strike police order in dharmapuri
தருமபுரி மாவட்டத்தில் நாளை நடைபெறும் கடையடைப்பு போராட்டத்திற்கு யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி வரும் 04.10.2024 அன்று அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தவுள்ளது. அதில் வணிகர்கள் கலந்து கொள்ளுமாறு ஒரு கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் இணைந்து, எந்த வணிகரையும் கட்டாயப்படுத்தி கடையடைப்பு செய்ய சொல்லவோ அல்லது கடைகளை மூட வலியுறுத்தி மிரட்டல் விடுப்பதோ குற்றம். எனவே அவ்வாறு செயல்படுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இயல்பாக வழக்கம் போல் கடை செயல்படவும், வணிகம் மெற்கொள்ளவும் யாதொருவரும் அச்சம் கொள்ள தேவையில்லை. போதுமான காவல் பாதுகாப்பு வணிகர்களுக்கும், கடை மற்றும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும். கடை வீதி, வணிக வளாகங்கள், உழவர் சந்தைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களுக்கு உரிய காவல் துறையின் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படும். போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் கடையை நடத்துவோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்.பொது மக்கள் தருமபுரி மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் வழக்கமாக வாணிபம் செய்ய எவ்வித அச்சமும், தயக்கமும் கொள்ள தேவையில்லை என மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது. விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்படும் நபர்கள் மீது பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும். உரிய முறையில் அளிக்கப்படும் புகார் மீது தகுந்த சட்ட நடவடிக்கையை காவல் துறை உறுதி செய்யும்" என்று நடவடிக்கை எடுத்துள்ளது.
English Summary
not force come to strike police order in dharmapuri