தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திய நோட்டா - எந்தத் தொகுதியில் தெரியுமா? - Seithipunal
Seithipunal


ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 4 லட்சத்து 67 ஆயிரத்து 68 ஓட்டுகளை 'நோட்டா' பெற்றுள்ளது. இது 1.07 சதவீதமாகும். 

இந்த ஓட்டுகளில் அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் 26 ஆயிரத்து 450 வாக்குகளையும், குறைந்த பட்சமாக, கன்னியாகுமரி தொகுதியில் 3 ஆயிரத்து 756 வாக்குகளையும் 'நோட்டா' பெற்றுள்ளது.

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் தெரிவித்ததாவது:- 'நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் 'நோட்டா' ஆதிக்கம் செலுத்தி உள்ளது. இதுவரை, பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களின் முடிவுகளில் நோட்டா எந்த பாதிப்பையும் பெரிதாக ஏற்படுத்தவில்லை' என்று தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nota vote increase in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->