பீகாரில் அறிவிப்பு இல்லாமல் பணிக்கு வராத 62 அரசு மருத்துவர்களுக்கு நோட்டீஸ்.!!
notice send to 62 govt doctors in bihar
பீகாரில் அறிவிப்பு இல்லாமல் பணிக்கு வராத 62 அரசு மருத்துவர்களுக்கு நோட்டீஸ்.!!
பீகார் மாநிலத்தில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் 62 அரசு மருத்துவர்கள் பணிக்கு வராமல் உள்ளனர். அவர்களுக்கு மாநிலத்தின் சுகாதாரத்துறை, நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பணிக்கு வராமல் உள்ளவர்களில் சிலர் ஒரு ஆண்டாகவும், மேலும் சிலர் 5 ஆண்டுகளுக்கு மேலாகவும் பணிக்கு வராமல் இருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதார துறையின் இணையதளத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், "அனுமதியற்ற விடுமுறைக்கு 15 நாட்களில் விளக்கம் அளிக்காவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, ஆரம்பத்தில் பதில் அளிக்காத மருத்துவர்களுக்கு தற்போது பகிரங்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர உள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, "அதிகபட்ச ஒழுங்கு நடவடிக்கையாக தவறு செய்தவர்கள் பணிநீக்கம் செய்ய சட்டத்தில் இடம் உள்ளது" என்று தெரிவித்தார்.
English Summary
notice send to 62 govt doctors in bihar