சந்திரகிரகணத்தால் திருப்பதி கோவில் நடை  மூடல் - தேவஸ்தானம் தகவல்.! - Seithipunal
Seithipunal


இந்த மாதம் 8-ந்தேதி மதியம் 2.39 மணியிலிருந்து மாலை 6.27 மணி வரை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. இந்த சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை 8 ம் தேதி காலை 8.40 மணியில் இருந்து இரவு 7.20 மணி வரை 11 மணிநேரம் சாற்றப்படுகிறது. 

இதனால் கோவிலில் நடைபெறும் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கான தேதி, நேரம் குறிப்பிட்ட டோக்கன்கள் வழங்குவது, வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் அனுமதிப்பது, ஸ்ரீவாணி திட்ட அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கும் பக்தர்களுக்கான தரிசனம், ரூ.300 தரிசனம், ஆர்ஜித சேவைகள் உள்ளிட்ட அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து, கிரகணம் முடிந்த பிறகு வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் இரண்டில் இருந்து மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல், கிரகணம் நேரத்தில் திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா அன்னதானக்கூடம், வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட மாட்டாது. 

இதைத்தொடர்ந்து, அன்று இரவு 8.30 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்படும். எனவே திருமலைக்கு வரும் பக்தர்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்" என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

november eight tirupati temple gate close for moon eclipse


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->