பெரும் அதிர்ச்சி! கொல்கத்தா மருத்துவரை தொடர்ந்து உத்திரபிரதேசத்தில் நர்ஸ் கற்பழிக்கப்பட்டு கொலை! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசத்தில் பணி முடிந்து வீடு திரும்பிய செவிலியர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த 30 வயதான செவிலியர் ஒருவர் தனது 11 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். உத்தரகண்ட் மாநிலம் மூத்தன்சி நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி மாலையில் வேலை முடித்து விட்டு வீடு திரும்பிய அவர் வீட்டுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்து அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தோம் அவரை காணவில்லை என்று கூறப்படுகிறது.

பின்னர் மாயமான செவிலியரை கண்டுபிடித்து தருமாறு செவிலியரின் சகோதரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 8ஆம்  தேதி அன்று செவிலியர் வீட்டில் இருந்து  இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள காலி மனை பகுதியில் செவிலியர் நிர்வாணமான நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் செவிலியர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதை எடுத்து போலீசார் காணாமல் போன வழக்கை கற்பழிப்பு மற்றும் கொலை வழக்காக பதிவு செய்து  தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் முதற்கட்ட விசாரணையில் கடந்த 30ஆம் தேதி செவிலியர் மருத்துவமனையில் இருந்து பணியை முடித்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர் வழியை மறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் செவிலியரை தாக்கி புதிர்வுக்குள் இழுத்துச் சென்று கற்பழித்து நர்சிங் கைக்குட்டையாலே மூச்சுத் திணற செய்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதனையடுத்து தனிப்படை போலீசார் ராஜஸ்தானில் பதுங்கி இருந்த தர்மேந்திரகுமாரை கைது செய்து உள்ளனர். மேலும் செவிலியர்களிடம் அவர் திருடி சென்ற செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nurse was raped and murdered after returning home after work in Uttar Pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->