இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கு ஒடிசாவில் வாழ்த்து தெரிவித்த சிற்ப கலைஞர்.!
odisa soil artist wishes to ingland president rishi sunak
இங்கிலாந்து நாட்டில் பெண் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் வரிக்குறைப்பு பிரச்சனைக் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமரை தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடங்கியது.
அப்போது, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரே பிரதமராக பொறுப்பேற்க முடியும் என்ற நிலை இருந்ததனால், இங்கிலாந்து நாட்டின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வு ஆனார்.
இதையடுத்து இங்கிலாந்து நாட்டில் புதிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்று ரிஷி சுனக்கிற்கு இங்கிலாந்து அரசர் மூன்றாம் சர்லஸ் இன்று அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், இன்று அரசர் மூன்றாம் சார்லசை சந்தித்து பேசினார். அப்போது, அரசர் மூன்றாம் சார்லஸ், முறைப்படி புதிய பிரதமராக ரிஷி சுனக்கை அறிவித்தார்.
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமாராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த 42 வயதான ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ஓடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பிரமாண்டமான மணற் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.
அதன் பின்னர், மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தனது டுவிட்டர் பதிவில் தான் உருவாக்கிய புகைபடத்தை பகிர்ந்து மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
English Summary
odisa soil artist wishes to ingland president rishi sunak