ஒடிசா ரயில் விபத்து.. இரங்கல் தெரிவித்த தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி.!
Odisaa train accident world leaders condolences pm Modi thanks
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சென்னை பெங்களூர் ரயில்கள் என 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த உடலுறவில் சிக்கிய இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த ரயில் விபத்து காரணமாக 95 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் ரஷ்ய அதிபர் புதின், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ, மற்றும் பிரான்ஸ், ஜப்பான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தங்கள் இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்த உலக நாடுகளின் தலைவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் அன்பான வார்த்தைகள் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மனவலிமையை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
English Summary
Odisaa train accident world leaders condolences pm Modi thanks