ஒடிசாவை கைப்பற்றும் பாஜக! நவீன் பட்நாயக் ஆட்சி முடிவுக்கு வருகிறது!  - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மக்களவைப் பொதுத்தேர்தல் நடந்து முடிந்து, இன்று காலை முதல்  வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

இந்த மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் ஆகிய நான்கு மாநில சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற்றது. 

இதில், அருணாச்சல் மற்றும் சிக்கிம் மாநில அரசுகளின் தேர்தல் முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

இதில், ஒடிசா மாநிலத்தைப் பொறுத்தவரை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியான முன்னிலை நிலவரப்படி, மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் பாஜக 65 இடங்களிலும் பிஜு ஜனதா தல் 45 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன. 

காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும், ஜார்க்கண்ட் முட்டி மோஜா ஒரு இடத்திலும், சுயேட்சை வேட்பாளர் 2 இடத்திலும் முன்னிலை பெற்று வருகிறார். 

தற்போது வரை 123 தொகுதிகளுக்கு முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Odisha Assembly Alections 2024


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->