ஒடிசா | பள்ளியின் கான்கிரீட் துண்டு விழுந்து விபத்து: மாணவர் பலி!  - Seithipunal
Seithipunal


பத்ரக் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் கான்கிரீட் துண்டு விழுந்து ஒன்றாம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஒடிசா, துசூரி காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட உச்படா தொடக்கப்பள்ளி வழக்கம்போல் நேற்று இயங்கி கொண்டிருந்தது. 

அப்போது திடீரென பள்ளியின் மேற்கூரை ஒரு பகுதி பெயர்ந்து விழுந்ததில் ஒன்றாம் வகுப்பு மாணவர் ஆஷித் நாயக் (வயது 6) பலத்த காயமடைந்தார். 

இது குறித்து அறிந்த ஆசிரியர்கள் உடனடியாக காயம் அடைந்த மாணவரை மீட்டு அருகில் இருந்த அரசு சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக பத்ரக் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டார் என தெரிவித்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியின் மேற்க்கூரை விழுந்து மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Odisha School concrete slab falls accident Student killed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->