ஒடிஸாவில் இன்று பொது விடுமுறை: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் விதமாக ஹோலி பண்டிகை ஆண்டுதோறும் அம்மாநில மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 

அது போல் ஒடிசா மாநிலத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். 

ஹோலி பண்டிகையின் போது பொதுமக்களுக்கு அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க தீயணைப்பு துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 

மேலும் ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களை பூசிக்கொண்டு ஆறுகளில் குளிக்க அலைமோதுவதால் ஆற்றங்கரைகளிலும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Odisha Today public holiday 


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->