கருத்து கணிப்பு | வசமாக சிக்கிய தனியார் தொலைக்காட்சி - அதிரடியில் இறங்கிய தேர்தல் ஆணையம்!  - Seithipunal
Seithipunal


தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்ட தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி காலை 7 மணி முதல், வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.

இந்த தடையை மீறி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தனியா தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை அண்மையில் வெளியிட்டிருந்தது.

இதனை அடுத்து அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி ஒடிசா மாநில தேர்தல் ஆணையருக்கு இந்திய தேர்தல் ஆணையம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒடிசா மாநிலத்தை பொறுத்தவரை மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற பொதுத் தேர்தலும் நான்கு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஜூன் ஒன்றாம் தேதி இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

கடந்த 2000ம் ஆண்டு முதல் தொடர்ந்து 24 ஆண்டுகளாக அம்மாநிலத்தின் முதல்வராக நவீன் பட்நாயக் இருந்து வருகிறார். இந்த சட்டமன்றத் தேர்தலிலும் அவரே முதலமைச்சர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ள நிலையில், அவரே மீண்டும் ஆட்சிக்கு வருவார் வர வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில் பாஜகவும் ஆட்சியைப் பிடிப்பதற்கு உண்டான வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Odisha TV Channel LS Poll EC order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->