பஞ்சாபில் அமலுக்கு வந்த பழைய ஓய்வூதிய திட்டம்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. 

இதற்கு முன்னதாக ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளன. 

இந்நிலையில் பஞ்சாப் அரசு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை எதிர்கொண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வாங்குவார்கள்.

இந்த ஓய்வூதியமானது, அவர் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் பாதியாகும். ஆனால், புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை ஓய்வூதிய நிதிக்கு செலுத்துவர். 

இதனை அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும்போது, ஒரேமுறை மொத்தமாக குறிப்பிட்ட தொகையை பெறுவர். நாட்டில், பழைய ஓய்வூதிய திட்டம் கடந்த 2003-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கைவிடப்பட்டது. மேலும், புதிய ஓய்வூதிய திட்டம் கடந்த 2004-ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old pension scheme implemented in Punjab


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->