பீகார் : அமோனியா வாயு கசிந்து விபத்து...! ஒருவர் பலி, 30க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை...! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலம் ஹாஜிபூரில் உள்ள பால் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 35க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தின் ஹாஜிபூரில் உள்ள பால் தொழிற்சாலை அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் தொழிற்சாலையில் இருந்து வெளியேற ஓடியதால் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது சிலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் அமோனியா வாயு கசிவினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் அம்மோனியா வாயுவை சுவாசித்ததால் 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக ஹாஜிபூர் சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் நிலைமை தற்போது சீராக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து அமோனியா வாயு கசிவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தீயணைப்புத் துறை டிஎஸ்பி அசோக்குமார் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One Dead over 30 Hospitalised Due To Ammonia Gas Leak In Dairy at bihar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->