மகாராஷ்டிரா : அவுரங்காபாத்தில் மாவோயிஸ்டுகள் பயன்படுத்திய 162 வெடிகுண்டுகள் மீட்பு.!
one hundrand and sixty two bombs rescue in aurangabad
மத்திய சேமக் காவல்படை (சிஆர்பிஎஃப்) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- "மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டவிரோத மாவோயிஸ்டுகளுக்கு எதிராக சிஆர்பிஎஃப் மற்றும் பிகார் காவல்துறையினர் எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளால், மாநிலம் இயல்பு நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.
அதாவது, அவுரங்காபாத்தில் மாவோயிஸ்டுகள் தங்கியிருந்த பகுதிகளில், மாவோயிஸ்டுகளால் புதைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை மீட்கும் குறிக்கோளுடன் இந்த நடவடிக்கைகள் நடைபெறுகின்றது.
கடந்த 27 ஆம் தேதி ஔரங்காபாத் லதுய்யா பஹாட் பகுதியில் சிஆர்பிஎஃப் மற்றும் பிகார் காவல்துறையினர் இணைந்து நடத்திய தேடுதல் மற்றும் அழிப்பு நடவடிக்கையில், பதின்மூன்று நாட்டு வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டன.
அந்த வெடிகுண்டுகளை அந்த இடத்திலேயே அழித்துவிட்டு மேலும் தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்தனர். அப்போது ஒரு குகைக்கு அருகில் சென்று தேடுதல் நடவடிக்கை நடத்திய போது, தலா ஒரு கிலோ எடையுள்ள 149 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பின்னர், அந்த நாட்டு வெடிகுண்டுகளையும் அவர்கள் அழித்தனர்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
one hundrand and sixty two bombs rescue in aurangabad