மத்திய பிரதேசம்: புலி தாக்கி ஒருவர் பலி.! போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் புலி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் உள்ள பென்ச் புலிகள் காப்பகத்துக்கு அருகே உள்ள கோண்டே பகுதியைச் சேர்ந்தவர் சன்னிலால் படேல்(55). இவர் வீட்டின் பின்புறம் அமர்ந்து கொண்டிருந்தபோது திடீரென்று கிராமத்துக்குள் புகுந்த புலி சன்னிலால் படேலை கொடூரமாக தாக்கி கொன்றது.

இதையடுத்து சன்னிலால் படேலின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அப்பகுதியில் திரண்ட நிலையில் புலி மேலும் இரண்டு பேரை தாக்கி விட்டு அங்கிருந்து வயலுக்குள் ஓடியது. இந்நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வனத்துறை அதிகாரிகளின் அலட்சியம்தான் ஒரு உயிர்போனது என்று அனைவரும் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகளை, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் ஆத்திரமடைந்து அவர்கள் மீது மரக்கட்டைகளை வீசினர். இதில் பென்ச் புலிகள் காப்பகத்தின் கால்நடை மருத்துவர் ஒருவர் பலத்த காயமடைந்தார். மேலும் வனத்துறை அதிகாரிகளின் 6 வாகனங்களை அடித்து நொறுக்கினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One person killed Tiger attack in madhya pradesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->