நீட் விவகாரம் - பொங்கி எழும் எதிர்க்கட்சிகள் - பதிலளிக்குமா ஒன்றிய அரசு? - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதாக இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இருப்பினும் மாணவர்கள் நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று போராடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் முறைகேடு தொடர்பாக பிரச்சனையை எழுப்புவோம் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. 

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் மல்லிகார்ஜூன் கார்கே வீட்டில் நடைபெற்றபோது, நீட் பிரச்சனை குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்குவோம் என்றுத் தெரிவித்துள்ளனர். அதேசமயம் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளிக்க தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது. 

நீட் பிரச்சனை தொடர்பாக நாங்க நோட்டீஸ் வழங்குவோம் என்று திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்தார். நீட் பிரச்சனையுடன் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துதல், ஆளுநர் மாளிகையை தவறாக பயன்படுத்துவதுடன் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாவத்தின்போது பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. 

அதுமட்டுமல்லாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வரும் திங்கட்கிழமை அன்று பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் ஒன்று கூட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

opposition teams question rised neet issue in lok shabha


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->