27-ந்தேதி வரை கனமழை - கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்.!  - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவாகி இருக்கும் "டானா" புயல் தீவிர புயலாக மாறியதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதே போல், கேரள மாநிலத்திலும் மழை பெய்து வருகிறது. 

இந்தப் புயல் மத்திய கிழக்கு அரபிக் கடலில் கர்நாடகா கடற்கரை பகுதியில் நிலை கொண்டிருப்பதன் காரணமாகவே கேரளாவில் மழை பெய்து வருகிறது. அங்கு வருகிற 27-ந்தேதி வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதன் படி, கோட்டயம், எர்ணாகுளம் இடுக்கி, திருச்சூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட்டும், திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம் திட்டா, ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலார்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் குறிப்பிட்ட மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

orange and yellow alart to 11 districts in kerala


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->