இந்திய எல்லைக்குள் பிடிபட்ட பாகிஸ்தான் சிறுவன்: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை! - Seithipunal
Seithipunal


பஞ்சாப், பலொபெட் கிராமம் அருகே பாகிஸ்தான் எல்லையில் நேற்று மாலை 6 மணி அளவில் எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது பாகிஸ்தானை சேர்ந்த ஒரு சிறுவன் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை பார்த்த எல்லை பாதுகாப்பு படையினர் சிறுவனை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், பாகிஸ்தான் கசூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும் அவரிடம் ஒரு செல்போன் மற்றும் பாகிஸ்தான் ரூபாய் 100 இருப்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து விசாரணைக்காக சிறுவனை ஹர்லரா பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது. 

இதனை தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் சிறுவன் பிடிபட்டதாக தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில் தங்களது தரப்பிலிருந்து யாரும் மாயமாகவில்லை எனவும் இது தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை எனவும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistani boy caught Indian territory 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->