முடங்கியது உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் சேனல்!....வழக்கு விசாரணை நேரலை பாதிப்பு! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் வழக்குகள் மற்றும் விசாரணைகளை ஒளிபரப்புவதற்காக பயன்படுத்தப்பட்டு வரும் உச்ச நீதிமன்ற யூடியூப் சேனலை, ரிப்பிள் என்ற பெயரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஹேக் செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஹேக் செய்யப்பட்டிருக்கும் உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தில், அமெரிக்காவை சேர்ந்த ரிப்பிள் லேப்ஸ் உருவாக்கிய  எக்ஸ்ஆர்பி கிரிப்டோகரன்சியை  விளம்பரப்படுத்தும் வீடியோக்கள் இடம் பெற்றுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதால் வழக்கு விசாரணை நேரலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முடக்கப்பட்ட யூடியூப் பக்கத்தை மீட்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அதே சமயத்தில், யூடியூப் பக்கத்தை முடக்கிய நபர்கள் குறித்து விசாரணை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Paralyzed YouTube channel of the Supreme Court Case investigation live impact


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->