திருப்பதி லட்டு விவகாரம்!...தேவஸ்தானம் பரபரப்பு விளக்கம்!
Tirupati laddu Affair Devasthanam sensation explanation
ஆந்திர பிரதேச மாநிலம், அமராவதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பொதுக் கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உறையாற்றினார்.
அப்போது, ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு கூட தரமற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டதாகவும், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாக பேசி இருந்தார்.
இதற்கிடையே சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷ்யாமளா ராவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் இருந்து ஜூன், ஜூலை மாதம் 4 டேங்கரில் வந்த நெய்யில் தயாரிக்கப்பட்ட லட்டின் தரம் குறைந்ததாக புகார்கள் வந்ததை அடுத்து, லட்டுவின் தரம் குறைந்தது குறித்து ஆந்திர அரசிடம் தெரிவித்தோம் என்று கூறினார்.
மேலும் குஜராத்திற்கு ஆய்விற்காக அனுப்பப்பட்ட நெய்யில் 20 சதவீதம் மட்டுமே தரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சோயா பீன்ஸில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்யில் கலப்படம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
பின்னர் இது தொடர்பாக நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வேறு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தரமற்ற நெய் விநியோகம் செய்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், எதிர்காலத்தில் இதுபோன்று நடக்கக்கூடாது என்பதே எங்களது விருப்பம் என்று கூறினார்.
English Summary
Tirupati laddu Affair Devasthanam sensation explanation