பாரீஸ் ஒலிம்பிக்: பதக்கம் வென்ற மானு பாகெர் - குடியரசு தலைவர், பிரதமர் மோடி வாழ்த்து! - Seithipunal
Seithipunal


பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர் 3 ஆம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மேலும், ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மானு பாகெர் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்திய தனது பதக்க வேட்டையை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மானு பாகெரின் வெற்றிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தனது வாழ்த்தினையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

அதில், "பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்கப் பட்டியலைத் தொடங்கிய மனு பாக்கருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

துப்பாக்கி சுடும் போட்டியில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மனு பாக்கரால், இந்தியா பெருமை கொள்கிறது. அவரின் இந்த சாதனை பல விளையாட்டு வீரர்களையும், பெண்களையும் ஊக்குவிக்கும். மேலும், எதிர்காலத்தில் மேலும் சாதனை படைக்க என் வாழ்த்துக்கள் என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

இதேபோல், பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024ல் சிறப்பான விளையாட்டால், இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றதற்காக மானு பாகெர்-க்கு வாழ்த்துகள்.

வெண்கலத்திற்கு வாழ்த்துக்கள். இந்தியாவுக்காக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளதால், இந்த வெற்றி மேலும் சிறப்பு வாய்ந்தது. நம்பமுடியாத சாதனை என்று பிரதமர் மோடி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Paris olympics 2024 Manu Bagher President of India 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->