அதானி பண மோசடி : நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மோடிக்கு ஆம் ஆத்மி எம்.பி கடிதம்.! - Seithipunal
Seithipunal


சில ஆண்டுகளுக்கு முன்பு உலக பணக்காரர் பட்டியலில் ஜெட் வேகத்தில் மேலே ஏறியவர் கெளதம் அதானி. இவரை ஆட்டம் காண வைக்கும் வகையில், அமெரிக்கவைச் சேர்ந்த ஹிண்டன் பர்க் நிறுவனம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில், அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை வெளியான அடுத்த இரண்டு நாட்களில் குழுமத்தில் உள்ள ஏழு நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களில் பங்குசந்தை மதிப்பு திடீர் வீழ்ச்சியை சந்தித்தது.

அதானி குழும நிறுவனத்தில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சி, அணியின் சொத்து மதிப்புகளை கடுமையாக பாதித்தது. சொத்துக்களின் மதிப்பு குறைந்து வருவதால், அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். 

இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங் சுமார் ஐந்து பக்க அளவில் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்து இருப்பதாவது:- 

"அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி குறித்த குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானவை. பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் செய்த மிகப்பெரிய ஊழல் குறித்து நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். 

அந்த மோசடி வழக்கில், அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி மற்றும் அவருடன் சம்பந்தப்பட்ட அனைவரின் பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் அனைவரும் நாட்டை விட்டு தப்பிச்செல்ல முடியாது. 

அந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும். இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்திலும் எழுப்ப உள்ளேன்" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

parliamentary joint committee investigation to adhani money fraud mp sanjai singh to modi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->