நடுவழியில் கட்டான பேருந்தின் ஸ்டேரிங் ராடு - பயணிகளின் கதி என்ன?
passengers injured for bus accident in dindukal vathalakundu
நடுவழியில் கட்டான பேருந்தின் ஸ்டேரிங் ராடு - பயணிகளின் கதி என்ன?
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று ஆண்டிப்பட்டிக்கு சென்று கொண்டு இருந்தது. இந்த பேருந்தில் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பயணிகள் என்று மொத்தம் பதினைந்து பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஸ்டேரிங் ராடு கட்டானதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்களுடன் பொதுமக்களும் சேர்ந்து பேருந்து விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
passengers injured for bus accident in dindukal vathalakundu