இரத்தத்தில் பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸ் ஏற்றப்பட்டதால் நோயாளி உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம் பாக்கியராஜ் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் பாண்டே என்பவர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த நிலையில் அவருக்கு ரத்த அணுக்களை அதிகரிக்க டிப்ஸ் மூலம் ரத்த பிளாஸ்மா ஏற்றப்பட்டது. அப்போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 

இந்த நிலையில் நோயாளிக்கு டிப்ஸ் மூலம் ரத்த பிளாஸ்மாவுக்கு பதிலாக சாத்துக்குடி பழச்சாறு ஏற்றப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் பிரதீப் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் என்ன தெரிய வந்தது அடுத்து மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 

இது குறித்து மருத்துவமனை நிர்வாகி கூறுகையில் நோயாளிகளின் உடலில் ரத்த அணுக்கள் அளவு 17 ஆயிரமாக குறைந்தது. இதனால் அவர்கள் அவரின் உறவினர்களிடம் பிளாஸ்மா ஏற்பாடு செய்யுமாறு கேட்டு இருந்தோம். அவர்கள் எஸ்ஆர்என் மருத்துவமனையில் இருந்து 5 யூனிட் பிளாஸ்மாவை கொண்டு வந்தனர். அதில் மூன்று யூனிட் பிளாஸ்மா நோயாளி உடலில் ஏற்றும் பொழுது அவருக்கு உடல்நிலை மோசம் அடைந்ததால் பிளாஸ்மா செலுத்தும் பணியை உடனடியாக நிறுத்தி விட்டோம்'' என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

patient died because of citrus limetta juice instead of plasma in the blood


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->