குடியிருப்பவர்களின் வீட்டை பூட்டியதால் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்..!
people block roaddue to lock resident house
புதுச்சேரி மாநிலத்தில் சாரம் முத்து விநாயகர் தோப்பு பகுதியில் பல ஆண்டுகளாக நாற்பது குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சமீபத்தில், இந்த இடம் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், இந்த இடம் தனியார் ஒருவருக்கு சொந்தமானது என்று கோர்ட்டில் தீர்ப்பு வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, அவர் அங்கு குடியிருக்கும் நாற்பது குடும்பங்களை காலி செய்யுமாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிரச்சினைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அங்கு குடியிருப்பவர்களின் வீட்டை சிலர் பூட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதையறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பூட்டை அகற்றி அந்த குடும்பத்தினரை மீட்டனர்.
இந்நிலையில், அங்கு வசிக்கும் மக்கள் தங்களுக்கு நியாயம் வழங்கக்கோரி காமராஜ் சாலையில் திடீரெனெ மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையறிந்த உருளையன்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது, இந்த பிரச்சினை குறித்து நாளை மறுநாள் (சனிக் கிழமை) ரிச்சர்ட் எம்.எல்.ஏ. முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. இதன்பிறகு மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
English Summary
people block roaddue to lock resident house