தேசிய கொடி போர்த்தப்பட்ட ரத்தன் டாடா உடலுக்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி!....கட்டுக்கடங்காத கூட்டத்தில் இன்று மாலை இறுதி ஊர்வலம்!
People pay their last respects to ratan tata body wrapped in national flag funeral procession this evening in unruly crowd
டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் காலமானார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, இவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், இவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலமானார். இவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மும்பை நரிமன் பாயிண்ட் பகுதியில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்திற்கு இன்று காலை கொண்டு வரப்பட்ட அவரது உடல் மீது தேசிய கோடி போர்த்தப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக டாடா அறக்கட்டளை வெளியிட்டு அறிக்கையில், ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணியளவில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, ஒர்லியில் உள்ள டாக்டர் மோசஸ் சாலையில் உள்ள வழிபாட்டு அரங்கிற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு, இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்படும் என்றும், பின்னர் தகன பகுதிக்கு கொண்டு செல்லப்படும் டாடா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பொதுமக்கள் கட்டுக்கடங்காத கூட்டத்திற்கு மத்தியில் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
English Summary
People pay their last respects to ratan tata body wrapped in national flag funeral procession this evening in unruly crowd