குளோரின் வாயு கசிவால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல்.!! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் மாநிலம் டோராடூனில் உள்ள ஜான்ஜ்ரா பகுதியில் குளோரின் வாயு கசிவு காரணமாக அப்பகுதியில் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காலியான நிலத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த குளோரின் வெளியேறியதால் பொதுமக்கள் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. 

குளோரின் சிலிண்டர்களில் கசிவு ஏற்பட்டது காவல் துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தேசிய மற்றும்  மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வாயுக்கசிவு சம்பவத்தால் ஜான்ஜ்ரா பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People suffocated due to chlorine gas leak in Uttarakhand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->