தாகத்திற்கு குடிக்க தண்ணீர் கேட்டவரை ஆசிட் குடிக்க வைத்த உ.பி. போலீசார்! - Seithipunal
Seithipunal


அம்ரோஹா, உத்தரப்பிரதேசம்: அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் காவலில் இருந்த இளைஞர் தர்மேந்திர சிங்கிற்கு நெஞ்சு பதற வைக்கும் அனுபவம் நேர்ந்துள்ளது. காவலில் தண்ணீர் கேட்ட தர்மேந்திர சிங்குக்கு, போலீசாரால் ஆசிட் கொடுக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

இந்த விவகாரம் தொடர்பாக தர்மேந்திர சிங்கின் சகோதரர் கூறியதாவது: "அக்டோபர் 14 அன்று இரு தரப்பினர் சண்டையிட்டுக் கொண்டிருந்ததை பார்த்து, அதைத் தடுக்க முனைந்த எனது சகோதரர் தர்மேந்திர சிங்கை போலீசார் தவறாகக் கைது செய்தனர். காவல் நிலையத்தில் தண்ணீர் கேட்ட அவர், அதற்குப் பதிலாக, போலீசார் ஆசிட் கொடுக்கும்படி நடந்தனர். இதனால் அவரின் உடல்நிலை தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும, அவரை அடித்தும் துன்புறுத்தியும் இருப்பதாகத் தெரிகிறது" என்றார்.

இந்த கொடூர சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது. தர்மேந்திரா குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள், போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து தங்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

காவல்துறை அதிகாரிகளால் பொதுமக்கள் மீது நடந்த வன்முறைகளை அடுத்தடுத்து கண்டித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் லக்னோவில் காவலில் மோகித் பாண்டே என்பவர் உயிரிழந்த சம்பவத்தின் பிறகே இச்சம்பவமும் நடந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People who asked for water to quench their thirst were made to drink acid by UP Police


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->