'அப்பா' செயலி ('APPA' App )அறிமுகம்; அப்படி என்ன இருக்கு அதுக்குள்ள..?
The Chief Minister MK Stalin introduced the Appa app
'அப்பா' எனும் புதிய செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த செயலி தமிழ்நாடு பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழகத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த செயலியின் நோக்கம் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இடையேயான தொடர்பு இடைவெளியைக் குறைப்பதற்கும், அதன்மூலம் ஒட்டுமொத்த கல்வி அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் இந்த புதுமையான தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

இந்த 'அப்பா ' செயலி மூலம் பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழகத்தின் நிர்வாகிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அன்றாட தகவல் பகிர்வு மற்றும் பள்ளிக்கல்வித் துறை தொடர்பான அரசு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வதை எளிதாக்குகிறது எனவும் குறிப்பிடப்படுகிறது.
அத்துடன் பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அனைத்து உத்தரவுகளையும் இதில் காணக்கூடியதாக இருக்கும். இந்த செயலி மூலம் சுமார் 46 ஆயிரம் அரசுப் பள்ளிகள் மற்றும் அனைத்து மெட்ரிக், சி.பி.எஸ்.இ. மற்றும் பிற வாரியங்களை சார்ந்த சுமார் 12, ஆயிரம் தனியார் பள்ளிகள் பலனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
The Chief Minister MK Stalin introduced the Appa app