ஸ்டிக்கர் ஸ்டாலின்! இப்படி காப்பி அடிக்கிறிங்களே... பங்கமாய் கலாய்த்த தமிழிசை!
Tamilisai Soundararajan mk stalin BJP DMK
கடலூர்: திருப்பெயரில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் "பெற்றோர்களைக் கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில், "அப்பா" என்ற புதிய செயலியை முதல்வர் வெளியிட்டார். மேலும், பெற்றோர்-ஆசிரியர் கழக செயலி மற்றும் விழா மலரும் அவர் அறிமுகப்படுத்தினார்.
ஏற்கனவே, மாணவர்கள் தன்னை "அப்பா" என அழைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்த நிலையில், APPA என்று வரவழைக்க தமிழை கொலை செய்து (Aஅனைத்து Pபள்ளி Pபேரன்ட்ஸ் டீச்சர்ஸ் Aஅசோசியன்) இந்த APPA செயலி எல்லாம் கொஞ்சம் அக்கிரமாக இல்லையா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் தமிழிசை சவுந்தரராஜன், "முதல்வர் ஸ்டாலின், ஜெயலலிதா மற்றும் பிரதமர் மோடியை போல் காப்பி அடிக்கிறார்" என்று விமர்சித்துள்ளார்.
இது குறித்த அவரின் செய்திக்குறிப்பில், "அப்பா என்று அழையுங்கள்... அம்மா என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதா அவர்களைப் பார்த்து ஸ்டிக்கர்
முதலமைச்சர் மருந்தகங்கள்... பிரதமர் மோடி அவர்களின்.. பிரதமர் மருந்தகங்களை பார்த்து. ...ஸ்டிக்கர்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி என்ற. திரு எம் ஜி ஆர் அவர்களின். பாடலைப் பாடி திரு எம் ஜி ஆர் அவர்களைப் பார்த்து ஸ்டிக்கர் ...
#ஸ்டிக்கர் ஸ்டாலின் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Tamilisai Soundararajan mk stalin BJP DMK