மாடுகளை வைத்து மறியல்.! வழியில்லாமல் திண்டாடி போன அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


மாடுகளை வைத்து மறியல்.! வழியில்லாமல் திண்டாடி போன அமைச்சர்.!

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக இருப்பவர் தரம்பால் சிங். இவரது தொகுதியான அயோன்லாவில் உள்ள குர்கான் என்ற இடத்தில், நேற்று கால்நடை மருத்துவமனை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இதில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் சென்ற போது, சிரௌலி என்ற இடத்தில் அமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தை நூற்றுக்கணக்கான மாடுகள் திரண்டு மறியல் நடத்தியது. அவற்றை விலக்கிக்கொண்டு பயணத்தை தொடர்வதற்குள் அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் திண்டாடிப்போனது.

இதற்கு காரணம் அயோன்லா தொகுதியில் போட்டியிட்ட போது தரம்பால் சிங் வெற்றிபெறுவதற்காக அளித்த வாக்குறுதிகளில் ஒன்று, அப்பகுதிகளில் திக்கற்று திரியும் கால்நடைகளுக்கு போக்கிடம் அமைத்துக் கொடுப்பது என்பது. ஆனால், தரம்பால் சிங் தேர்தலில் வெற்றி பெற்றதும் அந்த வாக்குறுதியை மறந்து போனார்.

இதனால், ஆத்திரமடைந்த மக்கள், கால்நடைகளால் தாங்கள் அடையும் அவதிகளை அமைச்சரும் உணர வேண்டும் என்று கால்நடை மறியலை அரங்கேற்றி இருந்தனர். அப்போது கிராம மக்களை அழைத்துப் பேசிய அமைச்சர், உடனடியாக கால்நடைகளுக்கான புகலிடம் அமைக்கப்போவதாக தெரிவித்தார். 

இதனை நம்பி மக்கள் அமைச்சர் செல்வதற்கு வழிவிட்டனர். ஆனால், கால்நடை மருத்துவ அதிகாரி சஞ்சய் குமார் சர்மா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் படி, போலீசார் அமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தை கால்நடைகளை வைத்து மறித்ததாக, சிரௌலி கிராம மக்களில் 90 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

peoples block road with cows in uttar pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->