ராமர் கோவில் கட்டுவதில் மக்களுக்கு நம்பிக்கையே இல்லை - அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா பேச்சு.!
peoples not confident in ramar temple make assam cm Himanta Biswa Sharma speach in tiripura
இந்தியாவில் 60 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட திரிபுரா மாநிலத்தில் வரும் 16-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் பா.ஜ.க. தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், திரிபுரா மாநிலத்தில் உள்ள பனாமாலிபூர் பகுதியில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், அசாம் மாநிலத்தின் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
"பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக மேற்கொண்டு வரும் முயற்சிகள் ஏராளம். இதற்கு முன்பு எங்கள் அரசு ஆட்சிக்கு வந்தால் ராம ஜென்மபூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கு தீர்மானித்தோம்.
ஆனால், ராமர் பிறந்த நிலத்தை பாபர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார்கள். இருப்பினும் இன்று பாபரை அகற்றிவிட்டு அங்கு பிரமாண்ட ராமர் கோவில் கட்ட ஆரம்பித்துள்ளோம்.
முன்பெல்லாம் மக்களுக்கு நம்பிக்கையே இல்லை. எவரேனும் ராமர் கோயில் கட்டுவதற்கு முன்வந்தால் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வகுப்புவாத மோதல்கள் உருவாகும் என்று நினைத்தனர்.
இப்போது, ஒருபுறம், ராமர் கோயில் கட்டப்படுகிறது, மறுபுறம் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான சகோதரத்துவம் பாதிக்கப்படவில்லை. இதனால் தான் நாடு முன்னேறி வருகிறது." என்று அவர் தெரிவித்தார்.
English Summary
peoples not confident in ramar temple make assam cm Himanta Biswa Sharma speach in tiripura