மாணவியை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது..! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த 23-ம் தேதி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்றபோது ஆசிரியையின் கைக்கடிகாரத்தை திருடியதாக குற்றம்சாட்டி நடுரோட்டில் மாணவி மீது உடற்கல்வி ஆசிரியர் சரமாரி தாக்குதல் நடத்தினார்.

இதில் அந்த மாணவி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இது குறித்த காட்சிகள், அங்கு பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

வீடியோ வெளியானதையடுத்து, சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அதன் படி அரசு உதவிபெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் தியாகராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

இந்த நிலையில், தற்போது ஆசிரியர் தியாகராஜன் மீது பெண் வன்கொடுமைச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pet teacher arrest attack student in hosur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->