கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே பெட்ரோல்-மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் 83.18 சதவீத மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதேபோல் 55.38 சதவீதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். எனவே தடுப்பூசி போடாத அவர்களை ஓட வைக்கும் வகையில் அவுரங்காபாத்தில் மாவட்ட நிர்வாகம் புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி இனிமேல் தடுப்பூசி போடாத அவர்களுக்கு அங்கு பெட்ரோல் வழங்கப்படமாட்டாது என மாவட்ட நிர்வாகம் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெட்ரோல் டீலர் சங்க செயலாளர் அக்யூல் அப்பாஸ் கூறுகையில், "எங்களுக்கு ஆள் பற்றாக்குறை இருப்பதால், வாடிக்கையாளர்களிடம் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் சோதனை நடத்த ஆட்கள் தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டிருந்தோம்.

தற்போது இதற்காக பெட்ரோல் பங்குகளில் போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், பெட்ரோல் பங்குகளில் தடுப்பூசி போடும் மையங்களும் அமைக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கை மூலம் தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் உங்களால் மாவட்ட கலெக்டர் சுனில் சவான் தெரிவித்துள்ளார். மேலும் இலக்கை அடையும் வரை இந்த நடவடிக்கையை அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Petrol bunk get fuels compulsory covid Vaccinne


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->